Enable Javscript for better performance
அரசு மணல் குவாரிகளில் விதிமீறல்: கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மணல் குவாரிகளில் விதிமீறல்: கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

    By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் விதிமீறல் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, அவற்றைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

     சட்டம் - ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திரன் நாயர் முன்னிலை வகித்தார். வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.
     கூட்டத்தில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பேசிதாவது: மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மணல் லாரிகளை சோதனை செய்து, மணல் கடத்தலில் ஈடுபடும் லாரிகளை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் திருடும் சம்பவங்கள் நடந்தவண்ணமுள்ளன. அதனையும் கண்டறித்து தடுக்க வேண்டும்.
     மாவட்டத்தில் 3 அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அனுமதிக்கப்பட்ட ஆழம் மற்றும் தொலைவுகளில் மட்டும் மணல் எடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி மணல் எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai