சுடச்சுட

  

  ஆசிரியரை காரில் கடத்தி நகை, பணம் பறிப்பு: ஒருவர் கைது

  By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லாரி வாங்க பணம் தேவைப்பட்டதால், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே ஆசிரியரை காரில் கடத்தி நகை, பணம் பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
   புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் பாலு (55). இவர் விக்கிரவாண்டி அருகே பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு பகண்டையில் இருந்து புதுச்சேரிக்கு பைக்கில் சென்ற போது, கண்டமங்கலம் அருகேயுள்ள பக்கிரிப்பாளையம் பகுதியில் காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது.
   பின்னர், அவரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம், ஒரு பவுன் மோதிரம், 2 ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு புதுச்சேரியில் இறக்கிவிட்டனர். தொடர்ந்து, பாலுவின் ஏடிஎம் அட்டை மூலம் ரூ.45 ஆயிரம் பணத்தையும் அந்தக் கும்பல் எடுத்தது.
   இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பாலு அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
   இதில், புதுச்சேரி ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் (32) லாரி வாங்குவதற்காக போதிய பணம் கிடைக்காததையடுத்து, வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டாராம்.
   பாலு பணத்துடன் வருவதையறிந்த தர்மலிங்கம், தனது நண்பர்களான சேகர் (36), மணி (23) ஆகியோருடன் சேர்ந்து அவரை காரில் கடத்தி பணம், நகைகளைப் பறித்துச் சென்றதுடன், ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணையும் மிரட்டி வாங்கி, ரூ.45 ஆயிரம் பணத்தையும் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
   இதையடுத்து, தர்மலிங்கத்தை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான சேகர், மணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai