Enable Javscript for better performance
ஆசிரியர் வீட்டில் ரூ. 2 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ. 2.10 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றனர்.
     விழுப்புரம், பெரியகாலனி நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (37). ஆசிரியரான இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிக்கொண்டு தனது குடும்பத்தினருடன் குருவிநத்தத்தில் உள்ள உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றுள்ளார்.
     மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 2.10 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
     இது குறித்து மோகன் மனைவி கனகவள்ளி விழுப்புரம் மேற்கு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai