சுடச்சுட

  

  இரு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளிக்கு உதவித்தொகை: ஆட்சியர் உடனடி நடவடிக்கை

  By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத் திறனாளி கோரிக்கை வைத்த உடனேயே மாதாந்திர உதவித்தொகை ஆணையை வழங்கி ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
   திருக்கோவிலூர் அருகேயுள்ள முதலூர், மாதாகோயில் வீதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் முருகேசன் (42). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தொன்றில் தனது இரண்டு கைகளையும் இழந்தார்.
   இதனால், வேலைக்குச் செல்ல வழியன்றி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவரது குடும்பம் வறுமையில் தவித்து வந்தது. இது குறித்து முருகேசன் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.
   இந்நிலையில், வியாழக்கிழமை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்த முருகேசன், ஆட்சியர் எல்.சுப்பிரமணியனை சந்தித்து, தனது நிலைகுறித்து தெரிவித்து, மனு அளித்தார்.
   மனுவை உடனடியாக பரிசீலனை செய்த ஆட்சியர், இது குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் விசாரித்து உண்மை நிலையை அறிந்தார்.
   இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முருகேசனுக்கு வழங்கி, நடவடிக்கை எடுத்தார். எஸ்.பி. நரேந்திரன் நாயர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai