சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: பாமகவினர் விருப்ப மனு

    By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவது புதன்கிழமை தொடங்கியது.
     தைலாபுரம் தனியார் மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலர் சேது தலைமை வகித்தார். மாநில இணைப் பொதுச் செயலர் இசக்கி, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார். ஏராளமான பாமகவினர், விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கினர்.
     மாநில அமைப்புச் செயலர் செல்லக்குமார், துணைத் தலைவர்கள் ஏழுமலை, கருணாநிதி, தருமன், மாவட்டத் தலைவர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     தொடர்ந்து, செப்டம்பர் 25-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
     செஞ்சியில்...
     இதேபோல் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள பாமக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்ட நிகழ்ச்சியில், பாமக மாநில இணைப் பொதுச் செயலர் இசக்கி மற்றும் மாநில அமைப்பு செயலர் மி.கா.செல்வக்குமார், வடக்கு மாவட்டச் செயலர் ஜெ.பி.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
     நிகழ்ச்சியில் மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் அய்யனார், ஜெயக்குமார், அசோக், சக்கரவர்த்தி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் பூங்காவனம், நகரச் செயலர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai