சுடச்சுட

    

    கணவர் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவர் கைது

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 23rd September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி அருகே கணவருக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
     பெரம்பலூர், வடக்கு மாதவி தெருவில் வசித்து வந்தவர் முத்துசாமி மகன் செந்தில் (34). இவரது மனைவி கவிதா (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் முகமது அலி என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
     இவர்கள் வசித்து வந்த வீட்டுக்குப் பக்கத்தில் சிறுநிலா கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சுக்கூர் மகன் சம்சுதீன் (39) வசித்து வந்தார்.
     இந்நிலையில் கவிதாவுக்கும் சம்சுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கணவர் செந்தில், மனைவி கவிதாவை கண்டித்துள்ளார்.
     செந்திலுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது சம்சுதீன் தனது உறவினர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் உள்ளார். அவரிடம் பணம் வாங்கித் தருவதாகக் கூறி உள்ளார். இதனை நம்பிய செந்தில் சம்சுதீனுடன் கடந்த 17-ஆம் தேதி காரில் சென்றுள்ளார். இவர்களுடன் சம்சுதீனின் நண்பர் மணிகண்டன் உடன் சென்றுள்ளார்.
     காரில் சென்றபோது, செந்திலுக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். அதனைக் குடித்த செந்தில் மயக்கத்தில் இருந்தபோது, சம்சுதீன் வயரால் செந்திலின் கழுத்தை இறுக்கியதில் அவர் இறந்தார். அவரது சடலத்தை தோட்டப்பாடி லட்சுமணன் என்பவரது வயல் அருகே வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
     இது குறித்து தகவல் அறிந்த கீழ்க்குப்பம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     பின்னர், விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர் செந்தில் என்பதும், சம்சுதீனும் அவரது நண்பர் மணிகண்டனும் சேர்ந்து செந்திலை கொன்றதும், கொலைக்கு உடந்தையாக கவிதா இருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சம்சுதீன், அவரது நண்பர் மணிகண்டன், செந்திலின் மனைவி கவிதா ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai