சுடச்சுட

  

  சங்கராபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கி நிற்கும் சாக்கடைக் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டுமென செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டத் துணைச் செயலர் மா.க.வெங்கடேசன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.
   அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சங்கராபுரம் காலனி குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் கால்வாயில் நீண்ட நாள்களாக சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி காலரா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட விஷக் காய்ச்சல் பரவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. பலமுறை இது குறித்து முறையிட்டும், மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
   எனவே, பேரூராட்சி நிர்வாகம் கால்வாய்களில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai