சுடச்சுட

    

    சாலை ஆக்கிரமிப்புகளை நிலத்தில் வீசியதைக் கண்டித்து விவசாயிகள் முற்றுகை

    By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வானூர் அருகே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தில் வீசியதைக் கண்டித்து விவசாயிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
     வானூர் பகுதியில் உள்ள புத்துப்பட்டு - ஒழிந்தியாப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளது.
     இதற்காக, கழுப்பெரும்பாக்கம், கொழுவாரி, மொன்னையம்பேட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியுள்ளனர்.
     அப்போது, சாலையோர வேலிகள், மரங்கள், செடிகொடிகளை அகற்றி அருகே இருந்த விவசாய நிலங்களில் வீசியுள்ளதாகத் தெரிகிறது.
     இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜக ஒன்றியத் தலைவர் கார்த்திகேயன், மாவட்டச் செயலர் கோதண்டபாணி, பொதுச் செயலர் சிவானந்தம், செந்தில்நாதன், காத்தவராயன், மீனவரணி மஞ்சினி ஆகியோர் தலைமையில் திரண்டு வந்து, வியாழக்கிழமை வானூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
     சாலை விரிவாக்கம் என்ற பெயரில் முன்னறிவிப்பின்றி, வேலிகள், மரங்களைப் பிடுங்கி விவசாய நிலங்களில் போட்டுள்ளதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
     இதனையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நெடுஞ்சாலைத் துறை உதவிச் செயற்பொறியாளர் கிருஷ்ணன், விவசாய நிலங்களில் வீசப்பட்ட மரம், செடிகொடிகளை அகற்றுவதாக உறுதியளித்தார். இதனையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai