சுடச்சுட

    

    தீக்குளிக்க முயன்றவர் போலீஸிடம் ஒப்படைப்பு

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 23rd September 2016 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தீக்குளிக்க முயன்றவரை பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
     செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், இரண்டாவதாக தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
     இந்நிலையில், தேவி கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வருகிறாராம். இதனால், மனமுடைந்த நாகஜோதி புதன்கிழமை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தீக்குளிக்க முயன்றாராம்.
     அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நாகஜோதியை காப்பாற்றி, உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் நாகஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai