சுடச்சுட

    

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் குழந்தையுடன் கடத்தல்

    By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரக்காணம் அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை குழந்தையுடன் கடத்திச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராசநாயகம் மகன் பரமலிங்கம் (45). இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு வசித்து வருகிறார். இவரது மனைவி சுகுமதி (23), மகன் பிவின் (2).
     பரமலிங்கம் தனது மனைவி, குழந்தையுடன் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள வசவன்குப்பம் பகுதியில் உள்ள தனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு அண்மையில் வந்துள்ளார்.
     இந்நிலையில் புதன்கிழமை மாலை பொருள்கள் வாங்குவதற்காக பரமலிங்கம் மரக்காணத்துக்கு மனைவி சுகுமதி, மகன் பிவினுடன் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், சுகுமதி மற்றும் பிவினை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
     இது குறித்து பரமலிங்கம் மரக்காணம் போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai