பெண்களை கேலி செய்த 2 இளைஞர்கள் கைது
By கள்ளக்குறிச்சி | Published on : 23rd September 2016 09:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாலையில் நடந்து சென்ற பெண்களை கேலி செய்ததாக 2 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் சரண் (20), பூமாலை மகன் சிலம்பரசன் (28) ஆகிய இருவரும் பைக்கில் அமர்ந்துகொண்டு, அவ்வழியே சென்ற பெண்களை கேலி செய்து கொண்டிருந்தார்களாம். இதனை தங்கமுத்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் தங்கமுத்துவைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரண் மற்றும் சிலம்பரசனை கைது செய்தனர்.