சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
     கடலூர் மாவட்டம், பண்ருட்டி சின்ன பகண்டை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (43). இவரது மனைவி மகேஸ்வரி (38). மகள் கீதா (18). கடலூரில் தனியார் கல்லூரியில் பி.எஸ்ஸி., படித்து வந்தார்.
     இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு விக்கிரவாண்டி அருகே வீடுரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கரியமாணிக்கத்தைச் சேர்ந்த சேகருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
     விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு அழுக்குப் பாலம் பகுதியில் சென்ற போது திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற லாரி இவர்கள் மீது மோதியது. இதில், மகேஸ்வரி, கீதா ஆகியோர் காயமடைந்தனர். அந்தப் பகுதியிலிருந்தவர் அவர்களை மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai