சுடச்சுட

    

    மினி டெம்போ மீது பேருந்து மோதல்: ஓட்டுநர் சாவு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 23rd September 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கள்ளக்குறிச்சி அருகே மினி டெம்போ மீது அரசுப் பேருந்து மோதியதில் டெம்போ ஓட்டுநர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
     கச்சிராயப்பாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்த பச்சையாப்பிள்ளை மகன் மதுபாலன் (20). இவர், மினி டெம்போவில் பாலை ஏற்றிச் சென்று, மாடூரில் உள்ள தனியார் பால் பண்ணையில் பாலை இறக்கிவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
     மாடூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து டெம்போவின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய டெம்போ சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் டெம்போ ஓட்டுநர் மதுபாலன் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
     இது குறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai