சுடச்சுட

    

    மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 32 லட்சம்

    By செஞ்சி,  |   Published on : 23rd September 2016 09:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், கடந்த மாதம் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ. 32 லட்சத்து 44 ஆயிரத்து 315 செலுத்தியிருந்தனர்.
     மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. ஊஞ்சல் உற்சவத்தின்போது, சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்த கொள்வார்கள்.
     மேலும், தினமும் ஆயிரக்
     கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
     மாதந்தோறும் அமாவாசை சிறப்பு வழிபாடு முடிந்த பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அந்த வகையில் கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணி உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ரூ. 32 லட்சத்து 44 ஆயிரத்து 315 மற்றும் 161 கிராம் தங்கம், 315 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
     உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர்கள் சேகர், ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, கோயில் கண்கானிப்பாளர் வேலு, மேலாளர் மு.மணி மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். வளத்தி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai