சுடச்சுட

  

  விக்கிரவாண்டி அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

  By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விக்கிரவாண்டி அருகே எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
   திருவள்ளுவர் மாவட்டம், சித்தநல்லூரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (45). லாரி ஓட்டுநர். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான டாரஸ் லாரியில், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
   விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை காலை லாரி வந்த போது, வரகநதி ஆற்றுப்பாலப் பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் ஜெயப்பிரகாஷ் பலத்த காயமடைந்தார். விக்கிரவாண்டி போலீஸார் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   விபத்தின் போது, லாரியிலிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் அடங்கியப் பெட்டிகள் சரிந்து விழுந்ததில் எண்ணெய் சாலையில் கொட்டியது. இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   இதையடுத்து, விக்கிரவாண்டி புறவழிச்சாலை வழியாக வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர்.
   விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai