சுடச்சுட

    

    வெற்றி வாய்ப்புள்ளவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்: பொன்முடி

    By விழுப்புரம்,  |   Published on : 23rd September 2016 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களை முன்னிலைப்படுத்துமாறு கட்சியினருக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.
     விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினரிடமிருந்து திங்கள்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
     இதனைத் தொடர்ந்து, தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட அவைத் தலைவர் கு.ராதாமணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பொருளர் புகழேந்தி, துணைச் செயலர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜனகராஜ், ஒன்றியச் செயலர்கள் ராஜா, ரவி, ரவிச்சந்திரன், மும்மூர்த்தி, இளைஞரணித் தலைவர் தினகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     மத்திய மாவட்டச் செயலர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் போட்டியிட இதுவரை 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது முக்கியமல்ல, வெற்றி வாய்ப்புள்ள நபர்களை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற வேண்டும். அதுதான் முக்கியமாகும் என்றார்.
     கூட்டத்தில் திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai