சுடச்சுட

    

    அழகுசாதன பொருள்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீ

    By விழுப்புரம்,  |   Published on : 24th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     மயிலம் அருகே அழகுசாதனப் பொருள்களை ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனம் வியாழக்கிழமை தீ விபத்தில் சேதமடைந்தது.
     மயிலம் அருகே சுந்தரேசர் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் சம்பத் (48). இவர் வளையல், மணி உள்ளிட்ட அழகுச்சாதனப் பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.
     அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் அழகுச்சாதனப் பொருள்களை வியாபாரம் செய்து வருகிறார். இருவரும் சேர்ந்து சென்னையில் இருந்து சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான அழகுசாதனப் பொருள்களை சிறிய சரக்கு வாகனத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்றி வந்தனர்.
     அந்த வாகனத்தில் இருந்து பொருள்களை இறக்காமல், சந்தோஷின் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, இவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். காலை எழுந்து பார்த்தபோது, வாகனத்துடன் அழகுசாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
     இது குறித்து மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai