Enable Javscript for better performance
தீ விபத்து: இரண்டு வீடுகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்துகளில் இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின.
     சாலாமேடு என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுபா. இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சிலிண்டர் டியூபில் தீப்பிடித்து. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
     அப்போது, சிலிண்டரில் இருந்து பரவிய தீ, வீட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இது குறித்து தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
     தீ விபத்தில் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.
     இதேபோல் பாண்டி சாலை, குப்புசாமி தெருவில் உள்ள வெங்கடேசன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்களை தீயை அணைந்தனர். இதில், அவரது வீட்டில் இருந்த துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின.
     மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்து தீ பற்றியதாகக் கூறப்டுகிறது. இந்த இரண்டு தீ விபத்துகள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai