சுடச்சுட

    

    பருவமழையை எதிர்கொள்ள கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 24th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் செந்தாமரை தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் குடியிருத்தல், கிராமத்தில் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை பணியில் இருத்தல், கிராம நிர்வாக அலுவலர்கள் முகாம்களுக்கு செல்லும்போது, தகவல் பலகையில் பதிவு செய்தல், கிராமங்களில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அலுவலருக்குத் தகவல் தெரிவித்தல், ஏரி, குளங்களைப் பார்வையிட்டு, கரைகள் பலமாக உள்ளதா எனக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலருக்குத் தகவல் தெரிவித்தல், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளின்போது, மக்களைத் தகுந்த இடங்களில் தங்க வைக்க சிறப்பு முகாம் அமைத்தல், அனைத்து கிராமங்களில் நடக்கும் இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குத் தெரியப்படுத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
     வருவாய் வட்டாட்சியர் ராஜேந்திரன், சமூகநல தனி வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர்கள் திருநாவலூர் பாஸ்கர், தனலட்சுமி, சொர்ணாம்பிகை, கற்பகம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai