சுடச்சுட

    

    வளவனூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
     புதுச்சேரி மாநிலம், திருபுவனை பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் உதயகுமார் (50). தொழிலாளியான இவர், வேலை காரணமாக விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை பைக்கில் வந்தார். பின்னர், அங்கிருந்து புதுச்சேரிக்கு கிழக்கு பாண்டி சாலையில் சென்றார்.
     அப்போது, வளவனூர் பகுதியில் எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது.
     இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த உதயகுமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai