சுடச்சுட

  

  முன்னறிவிப்பின்றி ரயில்வே கடவுப்பாதை பராமரிப்புப் பணிவாகன ஓட்டிகள் கடும் அவதி

  By விழுப்புரம்,  |   Published on : 24th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் அருகேயுள்ள ரயில்வே கடவுப் பாதைகளில் முன்னறிவிப்பின்றி, திடீர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

   விழுப்புரம்-திருச்சி ரயில்வே மார்க்கத்தில், ரயில்வே மேலாளர் ஜனவரி மாதம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
   இதற்காக, விழுப்புரத்தில் தொடங்கி திருச்சி மார்க்கத்தில் ரயில் பாதைகளில் ரயில்வே ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஆங்காங்கே பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
   இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு, கண்டமானடி, வளையாம்பட்டு ரயில்வே கடவுப் பாதையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பராமரிப்புப் பணி நடைபெற்றது.
   இதற்காக ஒருநாள் முழுவதும் அந்தக் கடவுப்பாதை மூடப்பட்டது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
   இந்நிலையில், மீண்டும் அதே ரயில்வே கடவுப்பாதையை, வியாழக்கிழமை காலை திடீரென
   மூடிவிட்டு, தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பின்றி ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டதால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
   குறிப்பாக கண்டமானடி, அரியலூர், குச்சிப்பாளையம், சாலாமேடு, கொளத்தூர், திருப்பாச்சனூர், சித்தாத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் 5 கி.மீ. தொலைவுக்கு சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
   ரயில்வே கடவுப்பாதையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும்போது, முன்னறிவிப்பு செய்துவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai