சுடச்சுட

    

    ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

    By திருக்கோவிலூர்,  |   Published on : 24th September 2016 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே நிலத்தை அளவீடு செய்ய ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நில அளவையாளர் உள்பட இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
     சங்கராபுரத்தை அடுத்த நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மனைவி ராணி (40). இவர் தனக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய ஆலத்தூர் கல்வராயன்மலை வருவாய் சரக நில அளவையாளர் பிச்சமுத்துவை (55) அணுகினார். அப்போது அந்த அலுவலகத்தில் இடைத் தரகராக செயல்படும் மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் செல்வகுமார் (27) நிலத்தை அளவீடு செய்ய ரூ. 3 ஆயிரம் தந்தால்தான் நில அளவையர் உங்களது நிலத்தை அளப்பார் எனக் கூறினாராம்.
     இதுகுறித்து கடலூர் ஊழல் தடுப்புப் பிரிவில் ராணி புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுரையின் பேரில், தும்பை பேருந்து நிறுத்தத்துக்குச் சென்ற ராணி, பிச்சமுத்துவிடம் ரூ. 3 ஆயிரத்தைக் கொடுத்தார்.
     அப்போது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி விஸ்வேஸ்ரய்யா தலைமையிலான போலீஸார், நில அளவையர் பிச்சமுத்துவையும், செல்வகுமரையும் கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai