சுடச்சுட

    

    லாரி மோதி அரசு மருத்துவமனை மதில் சுவர் சேதம்

    By  விழுப்புரம்,  |   Published on : 24th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரி மோதியதில் அரசு மருத்துவமனை மதில் சுவர் சேதமடைந்தது.
     விழுப்புரம் அரசு மருத்துவமனை, நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து மருத்துவம் பார்த்துச் செல்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
     இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மருந்து ஏற்றி வந்த லாரி, மருத்துவமனை நுழைவாயில் மதில் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, அங்கு பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
     இது குறித்து மருத்துவமனை அதிகாரி சுந்தரராஜன் கூறியதாவது: மருந்துப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள குடோனுக்கு வந்த லாரி தவறுதலாக மருத்துவமனைக்குள் வந்துள்ளது. வெளியே செல்ல முயன்றபோது, மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றார்.
     இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, உரிய பாதுகாப்பு வசதி இல்லாததே விபத்துக் காரணம் என்றும், இங்கு போதிய அளவில் காவலாளிகள் யாரும் இல்லை. யார் வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் அத்துமீறி உள்ளே நுழையலாம். பயன்பாடில்லாத கட்டடங்கள் அதிகமாக இருப்பதால், சமூக விரோதச் செயல்களும் இங்கு நடைபெற்று வருகின்றன என்றனர்.
     இந்நிலையில் விபத்து குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
     மேலும், பொதுப்பணித் துறை (சுகாதாரம்) அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
     சேதமடைந்த மதில் சுவர் மற்றும் பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்டது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai