சுடச்சுட

    

    திருக்கோவிலூரில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
     இப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சாலையில் எல்லைக் கயிறு பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலவீதி, ஒன்றிய அலுவலகச் சாலை, மருத்துவமனை சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையில் எல்லைக் கயிறு பதிக்கும் பணி நடைபெற்றது. எல்லைக் கயிறு பகுதியைத் தாண்டி இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்துக் காவலர்கள் எச்சரித்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai