சுடச்சுட

    

    விழுப்புரத்தில் 50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்கு சீல் வைப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 24th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் 5 கடைகளில் 50 கிலோ அளவில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
     மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு நியமன அதிகாரி வரலட்சுமி தலைமையில், விழுப்புரம் வட்டப் பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், செஞ்சி வட்ட அலுவலர் கதிரவன் உள்ளிட்ட குழுவினர் திரு.வி.க. வீதி, சங்கரமடம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
     அப்போது அங்குள்ள சில கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
     இதனையடுத்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த குழுவினர், அங்குள்ள ஒரு கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து நேருஜி சாலை, மாரியம்மன் கோயில் அருகே உள்ள பெட்டிகடை, மகாத்மா காந்தி வீதி, பழைய பேருந்து நிலையம், திருச்சி சாலை சந்திப்பில் உள்ள பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
     இந்தச் சோதனையில் 50 கிலோ அளவில், ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கிண்டி உணவுப்பொருள் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் அறிக்கை வந்தவுடன், கடைகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai