சுடச்சுட

  

  திண்டிவனம் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் நெமிலி கிராம விவசாயிகளுக்கு மணிலா பயிர் செய்தல் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
   உழவர் விவாத மன்றக் குழுத் தலைவர் மணிமேகலை வரவேற்றார். திண்டிவனம் உழவர் பயிற்சியாளர் விஜயகுமார் கலந்துகொண்டு, மணிலாவில் கூடுதல் மகசூல் பெறத் தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி, மானியத் திட்டங்கள் மற்றும் மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
   வேளாண் அலுவலர் சரவணன், விதை நேர்த்தி செய்யும் முறைகள், உயிர் உரம் பயன்படுத்துதல் குறித்து விளக்கமளித்தார். இதில் முன்னோடி விவசாயிகளான திண்டிவனம் கண்ணாவூர் ராஜேந்திரன், செஞ்சி ரெட்டிப்பாளையம் பச்சையப்பன் ஆகியோர் கலந்துகொண்டு, தங்களுடைய விவசாய அனுபவங்களை எடுத்துக் கூறினர். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் விவசாயத் தொழில்நுட்பம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai