சுடச்சுட

    

    ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம்

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 24th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைத்து வளங்களும் பெற்றுச் சிறப்பாக வாழவேண்டியும் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்று. இந்த யாகம் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறுவது வழக்கம்.
     அந்த வகையில் வருகிற நவ. 1-ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு, இந்த ஆண்டு மகா சண்டி யாகம் கலாமந்திர் வளாகத்தில் நடைபெற்றது.
     உளுந்தூர்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவர் சுவாமிஜி ஸ்ரீமத் அனந்தானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார்.
     ஸ்ரீசாரதா ஆஸ்ரம தலைமை மாதாஜி யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா முன்னிலை வகித்தார். யாக நிகழ்ச்சியில் ஆஸ்ரம சந்நியாச சகோதரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     சுவாசினி (சிறுமிகளுக்கான) பூஜை, வடுக (சிறுவர்களுக்கான பூஜை) மற்றும் கோபூஜை நடைபெற்றது.
     இந்த பூஜையில் 700 வேதமந்திரங்கள் ஓதப்பட்டன. பூஜையில் பலர் கலந்து கொண்டனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai