சுடச்சுட

    

    அரசு ஐ.டி.ஐ.யில் ஓட்டுநர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 25th September 2016 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னசேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுகின்றன.
    இது குறித்து, ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சின்னசேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு ஓட்டுநர் பணியிடத்துக்கு கீழ்க்கண்ட தகுதிகள் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும், பொது பிரிவினரில் முன்னுரிமை இல்லாதவராக இருக்க வேண்டும். அரசு விதிப்படி வயது வரம்பு, மேலும் வாகனம் பற்றிய தொழிற்நுட்ப அறிவு மற்றும் கனரக
    வாகனம் இயக்குதலில் 6 மாதங்களுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதிய விகிதம் 5,200 - 20,200 ஆகும்.
    அதேபோல் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பொதுப் பிரிவினரில் முன்னுரிமை இல்லாதவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு சலுகை உண்டு. ஊதிய விகிதம் 4800 - 10,000 ஆகும்.
    தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பங்களை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். மேலும், விபரங்களுக்கு சின்னசேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 04149 - 222339 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai