சுடச்சுட

    

     சங்கராபுரம் அருகே முசுகுந்தா நதியில் உடைந்த அணைக்கட்டை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வடபொன்பரப்பி கிராம எல்லையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. சங்கராபுரம் வட்டத்திலேயே, பரப்பளவில் பெரிய ஏரியான இதன் மூலம் வடபொன்பரப்பி, ராயசமுத்திரம், வடகீரனூர், நத்தம், மணலூர், உலகளப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    முசுகுந்தா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு மூலம், கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீர் வருமாறு வழி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக முசுகுந்தா நதியில் உள்ள அணைக்கட்டு உடைந்து கிடப்பதால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் போய்விட்டது. இதனால் ஏரி வறண்டு பாலைவனமாக மாறிவிட்டதுடன், இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதியின்றி தரிசாக மாறி வருகின்றன.
    இதனால், விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள், முசுகுந்தா நதியில் உடைந்த அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai