சுடச்சுட

  

  நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெற கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
  அந்த வகையில் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தின் 2-ஆம் தளத்தில், அறை எண் 1-இல் அமைக்கப்பட்டுள்ளது.
  இந்த மையத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளவும், புகார்களைத் தெரிவிக்கவும் பொதுமக்கள் (1800 425 4161 1800 425 4161), (1800 425 4171 1800 425 4171) என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ள, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai