சுடச்சுட

    

    தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்றது.
    செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர் திலகவதி வரவேற்றார். பயிற்சி முகாமை செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து, தேர்தல் அலுவலர்களின் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.
    மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவா, மணிமாறன், மணிகண்டன், வேலு, பரந்தாமன், சண்முகம், குணசேகர், சேகர், உதவிப் பொறியாளர்கள் ஆனந்தி, தனசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    கள்ளக்குறிச்சியில்... இதேபோல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான தேர்தல் பயிற்சி முகாம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக். பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் கு.சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் கோ.தனமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம், இரா.பொன்னம்பலம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சக்கரவர்த்தி வரவேற்றார்.
    இதில், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
    கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோ.அறிவழகன், அ.சக்கரவர்த்தி, முஸ்தபா, சி.ஷபி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோசப் ஆனந்தராஜ், ஆர்.சிவபாலன் அ.கணேசன் மற்றும் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
    உளுந்தூர்பேட்டையில்... உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி உளுந்தூர்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். பயிற்சியில் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai