Enable Javscript for better performance
கரும்புத் தொகை வழங்க நடவடிக்கை: தேமுதிக நன்றி- Dinamani

சுடச்சுட

    

    கரும்புத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    ரிஷிவந்தியம் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பகண்டை கூட்டுச் சாலையில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றியத் தொண்டரணிச் செயலர் அந்தோணி முன்னிலை வகித்தார்.
    கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விவரத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் உடனடியாக விருப்ப மனுவை அளிக்க வேண்டும். கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மேலும், பகண்டை கூட்டுச் சாலையில் விவசாய விதைப் பொருள் கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான இடத்தைத் தேர்வு செய்தமைக்கும், களையநல்லூர் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து பெரும்பாலான விவசாயிகளுக்கு கரும்புத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய கேப்டன் மன்றச் செயலர் வேலுமணி, விவசாய அணித் துணைச் செயலர் சீனுவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சிச் செயலர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai