Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் புகார்: உறுப்பினர்கள் வெளிநடப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு விவசாயிகள் கூட்டத்தில் புகார்: உறுப்பினர்கள் வெளிநடப்பு

    By DIN  |   Published on : 25th September 2016 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் கூறி வெளிநடப்பு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
    முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவபாண்டியன், கலிவரதன் தலைமையில் பலர் வெளிநடப்பு செய்தனர்.
    அவர்கள் கூறியதாவது: சங்கம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. கரும்பு விவசாயிகள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்தாண்டு தேர்தல் நடத்தாமலேயே நிர்வாகிகளைத் தேர்வு செய்துவிட்டனர்.
    இது குறித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின்றி, பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
    மொத்தமுள்ள 56 உறுப்பினர்களில், 36 பேர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறுகிறோம். சங்கத்தில் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது, பதிவாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவுள்ளோம் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai