கற்றல் திறன் கருத்தாய்வுக் கூட்டம்
By DIN | Published on : 25th September 2016 02:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ரிஷிவந்தியம் டேனிஷ்மிஷின் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் கருத்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை ஹேனிஸ்டெல்லா தலைமை வகித்தார். ஆசிரியைகள் ஜெயந்தி செல்வக்குமாரி, ஆக்னஸ் கிரேசி, ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜான் சுகுனதாஸ் வரவேற்றார்.
கூட்டத்தில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஞானவேல் கலந்துகொண்டு, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் செயல்பாடுகள், மாணவர்கள் கல்வி வளர்ச்சி அடைய வழிகாட்டுதல், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சு.ராஜேந்திரன், நல்லாசிரியர் ஆ.பர்னபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.