சுடச்சுட

    

    கழிவுநீர் தேக்கம்: புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு

    By DIN  |   Published on : 25th September 2016 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
    பேருந்து நிலையத்திலிருந்து கழிவுநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால், அவ்வப்போது அடைபட்டு நடைபாதையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் வெளியேறும் கால்வாய்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தினமும், பம்ப்பிங் ஸ்டேஷன் மூலம் மோட்டார் வைத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனினும், சில இடங்களில் உடைந்த கால்வாய் மற்றும் அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது.
    புதுவை பேருந்துகள் நிற்கும் பகுதியில், அடிக்கடி கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வழிந்து வருகிறது. இதேபோல், சனிக்கிழமை காலை புறநகர் பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பேருந்து நிலைய நடைபாதையில் தேங்கியது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
    தொடர்ந்து இவ்வாறு அடிக்கடி கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்பதால், சகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
    எனவே, கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைத்து, பேருந்து நிலையத்தை சுகாதாரமான நிலையில் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai