சுடச்சுட

    

    அவலுர்பேட்டை காளியம்மன் கோயில் அருகே உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதனையொட்டி, காலபைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காட்சியளித்தார்.
    தேய்பிறை வழிபாட்டையொட்டி, காளியம்மன் மற்றும் பிடாரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவர் மற்றும் காளியம்மன், பிடாரி அம்மனை வழிபட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai