சுடச்சுட

    

    விழுப்புரம் மண்டல மின்வாரிய நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் செப்டம்பர் 28-இல் கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது.
    இது குறித்து, விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் இரா.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், விழுப்புரம் மண்டலத்தின் ஜூலை - செப்டம்பர் 2016-ஆம் காலாண்டுக்கான மின் நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம், விழுப்புரம் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் தலைமையில், கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வருகிற செப். 28-ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
    பொதுமக்கள் மின்வாரியம் தொடர்பான புகார்கள் இருப்பின், அந்தந்தப் பகுதி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு புகார் மனுக்களை வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், 28-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு, புகார்கள் இருப்பின் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai