சுடச்சுட

    

    கண்டமங்கலம் அருகே கணவர் திட்டியதால், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    துலுக்காநத்தம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி கோமதி (32). இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
    கோமதி கடந்த மாதம் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். இது குறித்து, அவரது கணவர் பார்த்திபன் கேட்டு கண்டித்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்த கோமதி, கடந்த ஆக. 17-ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெணெய்யை உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாராம். காயமடைந்த அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai