Enable Javscript for better performance
நாட்டின் முன்னேற்றத்துக்கு புதிய கல்விக்கொள்கை அவசியம்: தேசிய கல்விக் கருத்தரங்கில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் முன்னேற்றத்துக்கு புதிய கல்விக்கொள்கை அவசியம்: தேசிய கல்விக் கருத்தரங்கில் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th September 2016 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டின் முன்னேற்றத்துக்குப் புதிய கல்விக் கொள்கை அவசியம் என விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய கல்விக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
    வித்யாபாரதி, மெட்ரிக். பள்ளிகள் சங்கம் மற்றும் புதுவை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்டத் தனியார் மெட்ரிக். பள்ளிகள் சங்கச் செயலர் ரமா வாசுதேவன் வரவேற்றார். புதுவை சுயநிதி தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புத் தலைவர் எம்.துளசி, தக்ஷன் சேத்ரா வித்யாபாரதி அமைப்பின் தலைவர் டி.சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
    கூட்டத்தில், நாட்டின் முன்னேற்றத்துக்குப் புதிய தேசிய கல்விக் கொள்கை அவசிமானது. கல்விக்கான புதிய சட்டங்களை கொண்டு வந்தாலும், அதனை ஆசிரியர்கள்தான் செயல்படுத்த முடியும்.
    அதற்கு உரிய தகுதியை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். திறமையான ஆசிரியர்கள்தான், திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்.
    நாளைய சமூகத்தின் சிறந்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களும், மனப் பாடப்படிப்பு சார்ந்தவர்களை உருவாக்குவதும் பயன் தராது. ஏட்டுப் படிப்பும், அதில் மதிப்பெண்களை வைத்து வேலைக்குச் செல்வதும், வசதி வாய்ப்போடு இருப்பது மட்டும் கல்வியின் நோக்கமாகாது. விவேகானந்தர் சொன்னதைப் போல், நாட்டை உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த இளைஞர்களை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய கல்வி கொள்கை அவசியமாகும் என வலியுறுத்தப்பட்டது.
    சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியர் சீனுவாசன், மெட்ரிக். பள்ளிகள் சங்கத் தலைவர் செல்வமணி மற்றும் சங்கத்தினர், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai