சுடச்சுட

    

    புரட்டாசி இரண்டாம் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 25th September 2016 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    விழுப்புரத்தை அடுத்துள்ள கோலியனூர் வரதராஜப்பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ராதா, ருக்மணி சமேதராக மூலவர் கிருஷ்ணர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
    திண்டினவத்தில்...
    இதேபோல் திண்டிவனம் ஸ்ரீஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மாத சிறப்பு வழிபாட்டில் காலை 6 மணியளவில் மூலவ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் காட்சியளித்தார்.
    இதில், திண்டிவனம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
    செஞ்சியில்...
    செஞ்சியை அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அரங்கநாதர் கோயில் பழைமை வாய்ந்ததாகும். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சனிக்கிழமை காலை அரங்கநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரங்கநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதஅரங்கநாதரை வழிபட்டனர். பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai