சுடச்சுட

    

    மரக்காணம் பகுதியில்பேரிடர் கால பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை

    By DIN  |   Published on : 25th September 2016 02:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரக்காணம் அருகேயுள்ள பனிச்சமேடு, கீழ்ப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில், பேரிடர் கால பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் முன்னிலையில் தீயணைப்புத் துறையினர், பேரிடர் தடுப்புக் குழுவினர் ஆகியோர் தங்களது வாகனங்களில் சுழல் விளக்குகளை ஒலித்தபடி கிராமத்தில் நுழைந்தனர்.
    இதனையடுத்து அங்கு, பேரிடர் காலத்தில் பாதித்தவர்களை மீட்பது குறித்து, மீட்புக் குழுவினர் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினர்.
    இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பேசியதாவது: இயற்கையின் சீற்றத்தால் திடீரென ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து பொதுமக்களைக் காப்பதற்கு, உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதே இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் குறிக்கோளாகும்.
    மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பேரிடர் குறித்து முழுமையான பயிற்சி பெறவேண்டும். அப்போதுதான் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை எளிதில் காத்துக்கொள்ள முடியும். மற்றவர்களையும் காப்பாற்ற முடியும்.
    மாவட்டத்தில், 30 கி.மீ. தொலைவில் கடல் பகுதி உள்ளது. கடற்பகுதிகளில் 19 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் உள்ளன.
    அனைத்து மையங்களிலும் 5 குழுக்கள் அமைத்து முதலுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் கால இடர்பாடுகளைச் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றார்.
    திண்டிவனம் உதவி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஊரக வளர்ச்சி நிறுவன மாநில ஆலோசகர் பேட்ரிக்பால், பேரிடர் மேலாண் திட்ட அலுவலர் கே.வாசுதேவன், வட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் தாமோதரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai