சுடச்சுட

    

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "அம்மா' உணவகம் பொதுமக்கள் வரவேற்பு

    By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
     இந்த மலிவுவிலை உணவகத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
     "அம்மா' உணவகம் என்னும் மலிவு விலை உணவகங்களை கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
     மாநராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த "அம்மா' உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், குறைந்த வருவாய் கொண்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் சிகிச்சை பெற வரும் அரசு மருத்துவமனைகளில், அம்மா உணவகங்கள் திறக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
     இதையடுத்து, அரசு பொதுமருத்துவமனைகளில் இவ்வுணவகங்கள் திறக்கப்பட்டன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் கட்டமாக "அம்மா' உணவகம் திறக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், அவர்களின் உறவினர்கள், ஏழை, எளிய மக்கள் உணவருந்தலாம்.
     ஞாயிற்றுக்கிழமை காலை இவ்வுணகம் செயல்பட்டுக்கு வந்தது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநர் ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மருத்துவமனை வளாகத்திலேயே அம்மா உணவகத்திற்கு என்று புதிதாக தனிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai