Enable Javscript for better performance
திண்டிவனம் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுக்கிய 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே கரும்புத் தோட்டத்தில் பதுக்கிய 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

    By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டிவனம் அருகே கரும்புத் தோட்டத்தில் மோட்டார் கொட்டகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான 3,500 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக ஒலக்கூர் போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர்கள் பாபு, கருணாநிதி, காவலர்கள் காளிதாஸ், தனபால், மதியழகன் மற்றும் தனிப்பிரிவு சீத்தாபதி ஆகியோர் சாரம் கிராமத்துக்குச் சென்று விசாரித்தனர்.
     அப்போது, குமார் என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் இருந்து சந்தேகப்படும் வகையில் சிலர் தப்பியோடினர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், மோட்டார் கொட்டகையை சோதனையிட்டனர்.
     அங்கு, 98 கேன்களில் சுமார் 3,500 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இங்கு சாராயத்தை பதுக்கி வைத்தது யார், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.
     பின்னர், எரிசாராயத்தை போலீஸார் கைப்பற்றி திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் ரோஸி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
     இதுகுறித்து, அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்த அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன், மேல்பேட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai