Enable Javscript for better performance
திருக்கோவிலூரில் சாலையோரம் வீசப்படும் மீன் கழிவுகளால் சுகாதாரக்கேடு- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூரில் சாலையோரம் வீசப்படும் மீன் கழிவுகளால் சுகாதாரக்கேடு

    By திருக்கோவிலூர்  |   Published on : 26th September 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூரில் சாலையோரம் வீசப்படும் மீன் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
     இதனால், சாலையோரம் மீன் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க மீன் இறைச்சிக்கூடம் அமைத்துத் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     திருக்கோவிலூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் ஆடு, கோழி இறைச்சிக்கூடம் அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், மீன் இறைச்சிக்கூடம் அமைப்பதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
     இதனால், நகரில் உள்ள முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து மீன் வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
     குறிப்பாக, திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பு மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட சாலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
     மேலும், மீன் கழிவுகள் சாலையோரங்களிலேயே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
     எனவே, திருக்கோவிலூரில் மீன் இறைச்சிக்கூடம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai