சுடச்சுட

    

    திருக்கோவிலூர் வழியாக கள்ளக்குறிச்சிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?

    By திருக்கோவிலூர்,  |   Published on : 26th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு திருக்கோவிலூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகளில் பெரும்பான்மையானவை உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் வழியாக இயக்கப்படுகின்றன.
     ஆனால், முகையூர், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் வழித் தடத்தில் கள்ளக்குறிச்சிக்குச் செல்லும் பேருந்துகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன.
     இதுதவிர, இரவு 11.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இவ்வழித்தடத்தில் கள்ளக்குறிச்சிக்கு பேருந்துகள் இல்லை. இதனால், முகையூர், மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
     இதேபோல, திருக்கோவிலூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 5 மணி வரை பேருந்து வசதியின்றி அவதிப்படுகின்றனர்.
     இந்நிலையில், சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் அரசுப் பேருந்துகள் விடிய விடிய விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் வழியாக இயக்கப்படுகின்றன.
     இவற்றில் சில பேருந்துகளையாவது இரவு 11.30 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து முகையூர், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக இயக்கினால், விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பயணிகளும், திருக்கோவிலூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பயணிகளும் பயன்பெறுவர்.
     இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai