சுடச்சுட

    

    பாஜக விருப்ப மனு: பொறுப்பாளர்கள் அறிவிப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு அளிக்க பாஜக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
     இதுகுறித்து, பாஜக கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் வெளியிட்ட அறிக்கை:
     20016-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான பாஜக விருப்ப மனு கடந்த 20-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தில் விருப்ப மனுக்கள் வழங்குவதற்கு வானூர் பகுதிக்கு மாவட்டத் தலைவர் விநாயகம், விக்கிரவாண்டி பகுதி மாவட்டப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், விழுப்புரம் பகுதி மாவட்டப் பொதுச்செயலாளர் சுகுமார், செஞ்சி பகுதி மாவட்டப் பொதுச் செயலாளர் அன்பழகன், திண்டிவனம் பகுதிக்கு வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.1,000, பேரூராட்சி உறுப்பினர், பஞ்சாயத்துத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.250 என விருப்ப மனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்
     பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai