சுடச்சுட

  

  மின் கம்பி உரசியதால் கரும்புத் தோட்டத்தில் தீ

  By திருக்கோவிலூர்,  |   Published on : 26th September 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்கோவிலூர் அருகே மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புத் தோட்டம் எரிந்து சேதமடைந்தது.
   திருக்கோவிலூரை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் ஆறுமுகம்(45). இவர் தனக்குச் சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.
   இத்தோட்டத்தில் சனிக்கிழமை மின் கம்பி உரசி விழுந்த மின்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு ஏக்கர் பரப்பளவிலான கரும்பு எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
   கிராம விவசாயிகள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லையாம். தகவலறிந்த மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் வந்து பார்வையிட்டு, கரும்பு வெட்டுவதற்கான உத்தரவை வழங்கினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai