சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

    By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு இறுதி முகாமை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
     விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 2017 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
     இதையொட்டி, கடந்த 11-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
     மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,223 வாக்குச்சாவடிகளுக்கு 1,641 வாக்குச்சாவடி மையங்களில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.
     இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து பெற்றுக்கொண்டனர்.
     முண்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வி.சாலை அரசு உயர்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாப்பனப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருவாமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
     விக்கிரவாண்டி வட்டாட்சியர் அருங்குளவன், வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோன்று, விழுப்புரத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமை கோட்டாட்சியர் ஜீனத் பானு, வட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai