சுடச்சுட

    

    வல்லம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
     வல்லம் வட்டாரத்தில் மருதேரி கிராமத்தில் வேளாண் துறை மூலம் மண்வளம் குறித்து விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கும் விழா வல்லம் ஊராட்சித் தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
     மண்ணின் நன்மைகள், தீமைகள் பற்றியும், மண்ணின் தன்மை பாசன நீர் பயிர் மேலாண்மை மற்றும் பிற உயிரியல் பண்புகளின் அடிப்படையில் மண்ணின் வளத்தையும் அறிந்து கொள்வதற்காகவும், உரச் செலவை மிச்சப்படுத்தவும், அதிகம் உரத்தை இட்டு பயிர்களுக்கு பூச்சி நோய் அதிகரிப்பதை தடுக்கவும் விவசாயிகளுக்கு இலவசமாக வேளாண்மை துறை சார்பில் மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன.
     இதில், வேளாண்மை அலுவலர் ரேவதி, துணை வேளாண்மை அலுவலர் மு.கர்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரவி, ஆஷாபி, பிரியா, செல்வி, சாவித்திரி, சிவசங்கரி, ஜெயந்தி, பாரி, பழனிகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai