Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பைக் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பைக் திருட்டு

    By விழுப்புரம்,  |   Published on : 26th September 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, பைக் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர்.
     திண்டிவனம் வகாப் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன்(51). இவர், சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் ஓலக்கூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
     இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்பழகன் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
     பின்னர், இதுகுறித்து அவர்கள் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அன்பழகன் விரைந்து வந்து பார்த்தார்.
     அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.
     இதுகுறித்து அன்பழகன் திண்டிவனம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai